பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு காலத்தில் தொடர் வெற்றியை குவித்த இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தார். இந்த ஆண்டு அவர் இசை அமைத்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இசை அமைப்பில் வெளிவர இருக்கிற படம் தேவ். இது குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் கூறியதாவது:
ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருப்பது உண்மை தான். இதற்கு காரணம் இடையில் எனக்கு வந்த சில படங்கள் டிராப் ஆனது தான். குறிப்பாக கார்த்தி, விஷால் நடிப்பதாக இருந்த வெள்ளை ராஜா கருப்பு ராஜா படத்திற்கு பாடல்கள் அனைத்தையும் முடித்த விட்ட நிலையில் டிராப் ஆனது. துருவ நட்சத்திரம் படம் தாமதம் ஆனது. இன்னும் சில படங்கள் ஆரம்ப நிலையிலேயே டிராப் ஆனது. இப்படி சில காரணங்களால் இந்த இடைவெளி ஏற்பட்டு விட்டது.
இப்போது தேவ் படத்தின் மூலம் எனது இசைப் பயணத்தை துரிதப்படுத்தியிருக்கிறேன். இதில் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. 15 பாடகர், பாடகிகள் பாடியிருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார். பின்னணி இசைக்கு பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறேன். வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு நான் ரசித்து இசை அமைத்த படம் தேவ் என்றார்.