'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொடர் தோல்விகளுக்கு பிறகு விஜய் ஆண்டனி, விழித்துக் கொண்டுவிட்டார். மூடர்கூடம் நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்தில் தனது தோற்றம், நடிப்பு எல்லாவற்றிலும் மாறுதல் கொண்டு வர இருக்கிறார். ஒரே மாதிரியாக நடிக்கிறார். ஒரே மாதிரி தோற்றத்துடன் வருகிறார் என்கிற விமர்சனத்தை அக்னி சிறகுகள் படத்தில் இருந்து மாற்ற நினைக்கிறார். அதோடு, சில காலத்துக்கு சொந்தமாக படம் எடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார். அக்னி சிறகுகள் படத்தை அம்மா கிரியேஷன் சிவா தயாரிக்கிறார். இதில் ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்புகள் ஜனவரி மாதம் தொடங்கிறது. தற்போது படத்தின் ஒத்திகை, மேக்அப் டெஸ்ட் போன்ற விஷயங்கள் நடந்து வருகிறது. இது குறித்து இயக்குனர் நவீன் கூறியதாவது:
விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர் தான் என அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர் தோற்றம் இருக்கும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல, அவர் கதாபாத்திரம் இந்த மாதிரியான மாற்றங்களை கோரியது. எனவே, பல்வேறு தோற்றங்களை பரிசீலித்து, இறுதியாக சரியான ஒன்றைக் கண்டுபிடித்தோம். கதை அல்லது கதாபாத்திரங்களை பற்றி எதையும் இப்போது வெளிப்படுத்துவது சரியாக இருக்காது. ஆனால், அக்னி சிறகுகள் மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்வேன் என்றார்.