அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகவாக கவர்ந்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இவருடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளன.
அடுத்தப்படியாக, பேட்ட படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இன்று(டிச.,28) காலை 11 மணிக்கு வெளியாவதாக சொல்லப்பட்ட டிரைலர் 10.30 மணிக்கு வெளியானது. ரஜினிகாந்த் சிறிய இடைவெளிக்கு பிறகு இளமையாக நடித்திருக்கிறார்.
இப்படம் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இருக்கும் என பேட்ட இசை வெளியீட்டு வழாவில் கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதன்வெளிப்பாடாக இந்த டிரைலர் இருக்கிறது.
20 பேரை அனுப்பி வைத்தேன் எல்லோரையும் அடிச்சு துவச்சுட்டான் விஜய் சேதுபதியின் குரல் உடன் டிரைலர் துவங்குகிறது. அதன்பின்னர், ஹாஸ்டல் வார்டனாம், மரண காட்டு காட்டிடான் என் பின்னணியில் குரல் ஒலிக்க, பார்க்க தானா போற இந்த காளியோட ஆட்டத்த என ரஜினி தோன்றுகிறார்.
ரஜினி, ஸ்டைலாக, இளமையாக, குறும்புத்தனமாக, ஆக்ரோஷமாக, அடிதடி என எல்லாமும் கலந்து பேட்டயில் இருக்கிறார்.
2.29 நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலர் ரஜினியை தவிர படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களான விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என அனைவரும் தோன்றுகின்றனர். கூடவே அனிருத்தின் பின்னணி இசையும் டிரைலருக்கு பக்காவாக அமைந்துள்ளது.
பொங்கல் ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வந்த பேட்ட படம் முன்கூட்டியே ஜன.,10ம் தேதி ரிலீஸாகிறது. தொடர் விடுமுறையில் கல்லா கட்டலாம் என்ற முனைப்பில் முன்கூட்டியே ரிலீஸ் செய்கின்றனர்.