மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சுதந்திர போராட்ட காலத்தில், வெள்ளையர்களை ஓட ஓட விரட்டிய, ஜான்சி ராணி லட்சுமிபாய் பற்றி, தெரியாதவர்கள் இருக்க முடியாது. லட்சுமிபாய் வாழ்க்கை வரலாறு, 'டிவி'சீரியலாக தயாரிக்கப்பட்டு, ஒளிபரப்பாகி, பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது, சினிமாவாகவும் தயாராகிறது.
125 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பிரமாண்டமாக, மணிகர்ணிகா - தி க்வீன் ஆப் ஜான்சி என்ற பெயரில், ஹிந்தியில் தயாராகும் இந்த படத்தில், பிரபல நடிகை கங்கணா ரணாவாத், லட்சுமிபாயாக நடிக்கிறார்.
'கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த கங்கணாவுக்கு, இந்த வேடம் பொருந்துமா...' என, பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர்களது வாயை அடைக்கும் வகையில், கடுமையான உடற்பயிற்சி, வாள் பயிற்சி, குதிரையேற்ற பயிற்சி செய்து, இந்த படத்தில் நடித்து முடித்து உள்ளார்,கங்கணா.
''இன்றைய இளம் தலைமுறையினருக்கு, ஜான்சி ராணி பற்றி தெரிந்து கொள்ள, இந்த படம் ஒரு வாய்ப்பாக அமையும். இதில் நடித்ததை, பெருமையாக கருதுகிறேன்,'' என்கிறார், கங்கணா.