'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கன்னடத் திரையுலகத்தில் பல வருடங்களாகவே வேறு மொழியிலிருந்து டப்பிங் செய்யப்படும் படங்கள் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கப்படவில்லை. கன்னடத் திரையுலகத்தினர் ஏகமனதாக முடிவு செய்யப்பட்ட ஒன்றாக அது இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக மற்ற மொழிப் படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிட சிலர் முடிவு செய்தனர். ஆனால், பலர் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படி நடப்பதைத் தடுத்துவிட்டனர்.
இதனிடையே, கடந்த வாரம் வெளிவந்த கன்னடப் படமான 'கேஜிஎப்' மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வசூலை அள்ளி வருகிறது. ஒரு கன்னடப் படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்ய மற்ற திரையுலகத்தினர் அனுமதிக்கும் போது, மற்ற மொழிப் படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய ஏன் அனுமதிக்கக் கூடாது என்ற குரல் உயர்ந்து வருகிறது.
அஜித் நடித்த 'விவேகம்' படம் சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அப்படத்தின் வெளியீட்டைத் தடுத்தால் கர்நாடகா பிலிம் சேம்பர் நிர்வாகிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என இந்திய போட்டிகள் ஆணையம் தெரிவித்தது. அதனால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அந்தப் படம் வெளியானது.
அதைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தை கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிட முயற்சிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி வேலைகள் முடிந்தால் படம் பொங்கலை முன்னிட்டு கன்னடத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் எனத் தெரிகிறது.