வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படம், கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. இது கிரிக்கெட் கனவு கண்டு அதனை எதிர்நீச்சல் போட்டு, உலக கோப்பையை வெல்லும் ஒரு கிராமத்து பெண்ணின் கதை. இந்தக்கதை பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்தப் படத்தை பள்ளி நிர்வாகங்கள் தங்கள் மாணவர்களுக்கு காட்ட ஆர்வம் காட்டுகின்றன. இதனால் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் அருண்ராஜா காமராஜும் இணைந்து விருப்பும் பள்ளிகளின் அருகில் உள்ள தியேட்டரில் கனா படத்தை காட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதுகுறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் கூறியதாவது:
ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடும்போது, வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக கருதப்படும். ஆனால் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சிறப்பு திரையிடலுக்காக எங்களை அணுகுவதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், ரசிகர்களின் வாய்வழி செய்தி மூலம் மிகப்பெரிய விளம்பரமாகி, திரையரங்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. படத்தை தங்கள் மாணவர்களுக்கு காட்ட விரும்பும் பள்ளிகள் எங்களை அணுகினால், உரிய உதவிகள் செய்த தர காத்திருக்கிறோம். என்றார்.