Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அங்காடி தெரு மகேசுக்கு நம்பிக்கை தரும் காதலி

27 டிச, 2018 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Maheshs-En-Kadhali-Seen-Podura

வசந்தபாலன் இயக்கிய அங்காடிதெரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் மகேஷ். அதன் பிறகு 10 படங்கள் வரை நடித்து விட்டார். அவை அனைத்துமே மிகச்சிறு படங்கள். எந்த படமும் மகேசுக்கு அடையாளம் தரவில்லை. இப்போது அவர் நடித்துள்ள, என் காதலி சீன் போடுறா என்ற படம் மீடியம் பட்ஜெட் படம் அவருக்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஜோசப் பேபி தயாரிக்கும் இந்தப் படத்தை ராம்சேவா இயக்குகிறார். இவர் ஏற்கெனவே டீக் கடை பென்ஞ் என்ற படத்தை இயக்கியவர். அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. இதில் மகேஷ் ஜோடியாக தெலுங்கு நடிகை ஷாலு நடிக்கிறார். வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரிஷ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது:


ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லா விட்டால் ஏற்படுகின்ற பிரச்னைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது.


இதை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். சின்னமச்சான் பாடலை தொடர்ந்து செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள். “நிலா கல்லுல செதுக்கிய சிலையா“ என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரியஹிட்டாகும்.


வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அங்காடிதெரு மகேசுக்கு இது திருப்பம் தருகிற படமாக இருக்கும் என்றார் இயக்குனர் ராம்சேவா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in