தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2.0 படத்தை தொடர்ந்து, ரஜினியின் பேட்ட படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. கடந்தவாரம் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி. தொடர்ந்து அடுத்த சில தினங்களில் அவரது குடும்பத்தாரும் அமெரிக்கா பறந்தனர்.
ஓய்வுக்கு சென்றாலும், அமெரிக்காவிலும் ரஜினியை ரசிகர்கள் அடையாளம் கண்டு, அவரை சூழ்ந்து கொள்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தனது ரசிகர்களை சந்தித்தார் ரஜினி. தொடர்ந்து அங்குள்ள நகர வீதிகளில் ரஜினியை சர்வ சாதரணமாக பார்க்க முடிகிறது. அங்கு ரசிகர்கள், அவருடன் போட்டோ எடுத்து கொள்கின்றனர். ரஜினியும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்களுக்கு போஸ் கொடுக்கிறார்.
இந்நிலையில், தனுஷ் டுவிட்டரில் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, விடுமுறை கொண்டாட்டம், குடும்பத்துடன் என பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில், ரஜினி, தனுஷின் தோள் மீது கை போட்டு, ஒரு நண்பர் போல் கிறிஸ்துமஸ் மரம் முன்பு போட்டோ எடுத்துள்ளனர். தற்போது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும். இந்த சூழலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனுஷ் உள்ளிட்ட குடும்பத்தாரும் ரஜினி சிறப்பாக கொண்டாடியிருக்கிறார். அடுத்தப்படியாக புத்தாண்டையும் கொண்டாட தயாராகி வருகிறார்.
பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் ரிலீஸ்க்கு முன்பாக சென்னை திரும்ப உள்ளார் ரஜினி.