'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கவுதம் மேனன் - விக்ரம் கூட்டணி முதன்முறையாக இணைந்த படம் துருவ நட்சத்திரம். படப்பிடிப்பு துவங்கிய சமயமே, பர்ஸ்ட் லுக், டீசர் என அமர்க்களமான அப்டேட் கொடுத்தனர். ஆரம்பத்தில் இருந்த வேகம் பின்னர் குறைய தொடங்கியது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நிதி பிரச்னையால் படப்பிடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நடந்து வருகிறது. இதனால், படப்பிடிப்பு முடியாமல் அவ்வப்போது முடங்கியது. இதன்பின்னர் விக்ரம் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. அடுத்து அவர் நடித்து வரும் கடாரம் கொண்டானும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது. 'கடாரம் கொண்டான்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'துருவநட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் விக்ரம். கவுதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் ஓரளவுக்கு சரி செய்யப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து தர விக்ரம் சம்மதம் சொல்லியிருக்கிறார்.