டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்து ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் கனா. அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். முதன்முறையாக தமிழில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில், கிரிக்கெட் மட்டுமின்றி, விவசாயியின் பிரச்சினையையும் படமாக்கியிருந்தார் இயக்குநர்.
இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்துக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், கனா படத்தைப்பார்த்த நடிகர் சிம்பு, படக்குழுவை பாராட்டியிருக்கிறார். இதையடுத்து கனா பட டைரக்டர் அருண்ராஜா காமராஜ், சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.