இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலையாள நடிகர் திலீப், பறக்கும் பப்பன் என்கிற தனது புதிய படத்தின் டைட்டிலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனரான வியன் விஷ்ணு இயக்குகிறார். ஒரு லோக்கல் சூப்பர் ஹீரோவை பற்றிய படமாக உருவாக இருக்கிறது என்பது போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் திலீப் நடித்த கிங் லையர் படத்திற்கு பிறகு திலீப் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே சீரியஸான படங்களாகத் தான் இருந்தன. அதை மாற்றும் விதமாக தற்போது, தனது ட்ரேட் மார்க்கான காமெடி ஏரியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். திலீப் மேலும் இந்த படத்தை கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தானே சொந்தமாக தயாரிக்கிறார் திலீப்.