இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'வட சென்னை' படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ள 'அசுரன்' படம், அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இப்படத்தின் இசையமைப்பாளர், நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே, இப்படத்திற்கு இசையமைக்க தன் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷிடம் இயக்குனர் வெற்றிமாறன் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
வெற்றி மாறன் இயக்கிய 'பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை' ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்தார். ஆனால், ஜிவி பிரகாஷ் நடிகரான பின் தனுஷ் - ஜிவி பிரகாஷ் இடையில் பிரிவு ஏற்பட்டது. 'வட சென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். ஆனால், அப்படத்தின் பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. இதனால், ஜிவி பிரகாஷை மீண்டும் இசையமைக்க வைக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் ஒரு பாடலை 'ஜெயில்' படத்திற்காகப் பாடிக் கொடுத்துள்ளார். இருவரது பிரிவும் அதன் மூலம் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. பிரிந்த கூட்டணி மீண்டும் இணையுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.