டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள படம் கண்ணே கலைமானே. தமன்னா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை சீனுராமசாமி இயக்கியிருக்கிறார். தர்மதுரை படத்தை அடுத்து சீனுராமசாமியும், தமன்னாவும் இணைந்துள்ள படம் இது.
பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். கண்ணே கலைமானே படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி உள்ளது. எந்தன் கண்களை என்று தொடங்கும் இப்பாடலை, சிவகார்த்திகேயன், டுவிட்டரில் வெளியிட்டார்.
காதலின் பிரிவை சொல்லும் விதமாக மெலோடியாக அமைந்துள்ள இப்பாடலை வைரமுத்து எழுதியுள்ளார், சூரஜ் சந்தோஷ் பாடியிருக்கிறார்.