ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹன்சிகா மோத்வானி சோலோ ஹீரோயினாக நடிக்கும் மகா படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பகுதி படம் பிடிக்கப்பட்டு விட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. ஜமீல் இயக்கும் இந்தப் படத்தை எக்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா காவி உடையில் தம் அடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில் அதைப் பற்றி கவலைப்படமல் படத்தை வேகமாக முடித்து வருகிறார்கள். இது குறித்து தயாரிப்பாளர் மதியழகன் கூறியதாவது:
ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான். இயக்குனர் ஜமீல், ஹன்சிகா மொத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் அர்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட காலத்துக்கும் முன்னதாக பணிகள் முடிந்து விடும். என்கிறார் தயாரிப்பாளர் மதியழகன்.