தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் படம் யோகி டா. இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கும் தன்ஷிகா, சவாலான ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படபிடிப்பு கோயம்புத்தூர் பகுதிகளில் நடந்து வந்தது. இரவு நேர கிளப் ஒன்றில் நாயகி சண்டையிடுவது போல காட்சி எடுக்கப்பட்டு வந்தது. அதில் நாயகி தன்ஷிகா நடித்த போது, பாட்டில் உடைந்து, அவரது கண்ணுக்கு கீழே கிழித்து விட்டது.
இதையடுத்து, தன்ஷிகாவை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, படக் குழுவினர் சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது, தன்ஷிகா ஓய்வில் இருப்பதால், மேற்கொண்டு படபிடிப்பை நடத்தாமல், படக் குழுவினர் நிறுத்திவிட்டனர். தன்ஷிகா குணம் அடைந்ததும், விரைவில் படபிடிப்பு துவங்கும் என்றும் படத் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது