கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், இப்போது படங்களில் நடிக்காமல் உள்ளார். சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
ஸ்ருதி, இத்தாலியை சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் கார்சலேயை இந்தியாவிற்கு வர வழைத்து, தனது பெற்றோர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போதே திருமணம் தொடர்பாக தான் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்றுள்ள ஸ்ருதி, மைக்கேல் கார்சலே உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், என்னை சிரிக்க வைப்பவன் நீ, இந்த உலகிலேயே அதுதான் முக்கியமானது என பதிவிட்டிருக்கிறார்.