தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வடசென்னை, மாரி 2 என தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், அடுத்தப்படியாக கவுதம் மேனன் இயக்கத்தில் நீண்டநாட்களாக உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படமும் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடிக்கும்போதே, அதன் மூன்று பாகங்கள் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டது. வடசென்னை இரண்டாம் பாகத்திற்கு முன்னதாக வேறு ஒரு கதையில் நடிப்பதாக தனுஷ் சொன்னார். அதன்படி அவரின் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அவர் நடிக்கும் அடுத்தப்படத்திற்கு அசுரன் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தையும் வெற்றிமாறன் தான் இயக்குகிறார். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார்.