'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
சர்கார் படத்தை அடுத்து ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களுக்கு, தங்க நாணயம் பரிசளித்தார்.
இது குறித்து, நடிகை கஸ்தூரி, “விஜய் மீடியாவை மீட் பண்ணதுக்கு வழக்கம் போல் இந்த பக்கம் அந்த பக்கம் ஒரே சர்ச்சை. நான் அதுக்குள்ளே போகல. என் புத்திக்கு என்ன எட்டுது தெரியுமா? ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பண்ணிட்டு, ஜாய் அலுக்கஸுல தங்க நாணயம் பர்ச்சஸ் பண்ணியிருக்காரே” என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
கடந்தவாரம் அஜித் பற்றியும், ரசிகர்கள் பற்றியும் டுவீட் செய்தியிருந்தார் கஸ்தூரி. அதற்கு அஜித் ரசிகர்கள், அவரை வசைப்பாடினர். இப்போது விஜய் ரசிகர்களும் கஸ்தூரியை டுவிட்டரில் வசைப்பாட துவங்கிவிட்டனர்.
மேலும் ஜாலியாக போட்ட ஒரு டுவீட்டை, இப்படி விஜய்க்கும், எனக்கும் சண்டையை மூட்டிவிட பார்க்கிறார்கள். ஒரு போதும் பலிக்காது என மற்றொரு டுவீட் செய்திருக்கிறார் கஸ்தூரி.