‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அஜித்தும், இயக்குநர் சிவாவும் நான்காவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் 'விஸ்வாசம்'. இந்த படம் பொங்கலுக்கு வெளிவருவதாக சொல்லப்பட்டது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளிவருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் எந்த தேதியில் ரிலீசாகிறது என்பதை 'சத்யஜோதி பிலிம்ஸ்' நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கியுள்ள நயன்தாராவின் மானேஜரான 'கோட்டபாடி' ராஜேஷின் 'கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் விஸ்வாசம் படம் ஜனவரி 10 அன்று தான் ரிலீஸ் என்று உறுதிபட கூறி வருவதாக விநியோகஸ்தர்கள் சொல்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தின் கேரள விநியோக உரிமையை டோமிச்சனின் 'முளகுபாடம் பிலிம்ஸ்' நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' மற்றும் சமீபத்தில் வெளியான ரஜினியின் '2.0' படம் உட்பட பல தமிழ்த்திரைப்படங்களை கேரளாவில் விநியோகம் செய்த நிறுவனம் இது. மலையாளத்தில் வெளியாகி வசூல் குவித்த 'புலி முருகன்' உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனமும் கூட.
விவேகம் படத்தின் கேரளா விநியோக உரிமையை வாங்கி நஷ்டம் அடைந்ததால் விஸ்வாசம் படத்தை அந்த விநியோகஸ்தருக்கே கொடுத்துள்ளனர்.