இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
முன்னணி காமெடி சேனலில் டாடி எனக்கு ஒரு டவுட்டு என்ற காமடி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் செந்தில். அந்த நிகழ்ச்சியின் பெயரால் டவுட் செந்தில் என்றே அழைக்கப்படுகிறார். உப்பு கருவாடு உள்பட பல படங்களில் சின்ன சின்ன காமெடி கேரக்டர்களில் நடித்தார். தற்போது கடைசி எச்சரிக்கை என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார்.
சுகுமார் கணேசன் என்பவர் இயக்குகிறார், வி.சந்திரசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், நோபல் ராஜா இசை அமைக்கிறார். மாரியப்பன், சீனிவாசன் தயாரித்துள்ளனர். "இது சுற்றுப்புற சூழல் மாசுபடுவதையும், விவசாயம் அழிந்து உணவுப் பொருள் விஷமாகி வருவதையும் சொல்கிற படம். எதையும் டவுட்டாக பார்க்கும் ஒரு இளைஞனின் கேரக்டர் என்பதால் செந்திலை ஹீரோவாக்கி இருக்கிறோம், படத்தில் அவர் கேட்கும் டவுட்டுகள் அனைவரையும் அதிர வைக்கும்" என்கிறார் இயக்குனர் சுகுமார் கணேசன்.