ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பிலிருந்து விலகிய நஸ்ரியா மீண்டும் நடிக்க வருகிறார். விஸ்வாசம் படத்தை அடுத்து இயக்குநர் வினோத் இயக்கும் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்.
இந்தப் படத்துக்கான பணிகள் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளன. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படம் மே மாதத்தில் அஜித்தின் பிறந்த நாளன்று வெளியாகிறது.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட 3 இளம்பெண்கள் தொடர்பான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிங்க் படம் எடுக்கப்பட்டது. பிங்க் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஜித்.
ஹிந்தியில் டாப்ஸி நடித்திருந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த கதாபாத்திரத்தில்தான் நடிகை நஸ்ரியா நடிக்கிறார். நஸ்ரியாவின் காதலராக அன்பானவன், அடங்காதவன், அசராதவன் பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறார்.