'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
'வாயை மூடி பேசவும்', 'ஒகே கண்மணி' ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் 'வான்' என்ற படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கும் படத்தில் இரண்டு கதாநாயகிகள்.
அவர்களில் ஒருவராக கிர்த்தி கார்பந்தா நடிக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷுடன் 'புரூஸ்லி' படத்தில் நடித்தவர். ஏற்கெனவே துல்கர் சல்மானுடன் 'கார்வான்' என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.
இன்னொரு கதாநாயகியாக கல்யாணி பிரியதர்சன். பிரபல மலையாளப்பட இயக்குனர் பிரியதர்சன் மற்றும் முன்னாள் நடிகை லிசியின் மகளான கல்யாணி பிரியதர்சன் 'வான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர் ஏற்கெனவே சில தெலுங்குப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்தப்படம் தவிர அஜித் நடிக்கும் புதிய படத்திலும் கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். பாலியல் தொல்லைக்குள்ளான 3 பெண்களில் ஒருவராக நடிக்கிறார். இந்தப்படத்துக்கு இவரை ஷாலினி தான் சிபாரிசு செய்தாராம்.