ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் தற்போது பிசியாக வலம்வரும் நகைச்சுவை நடிகர்களில் மொட்ட ராஜேந்திரனும் ஒருவர். சினிமாவில் பல வருடங்கள் சண்டை கலைஞராக பணியாற்றிய இவர் நான் கடவுள் படம் மூலம் முரட்டு வில்லனாக மாறி அப்படியே ரூட்டை மாற்றி நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார், இந்தநிலையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள ஒடியன் படத்தில் மீண்டும் பைட்டராக மாறியுள்ளார் மொட்ட ராஜேந்திரன்.
இந்தப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்.. இவரது குரூப்பில் ஏற்கனவே மொட்ட ராஜேந்திரன் பணியாற்றுவர் என்பதால் இந்தப்படத்தில் ஒரே ஒரு சண்டைக்காட்சியில் நடித்துக்கொடுத்தாராம். க்ளைமாக்ஸ் காட்சியில் மோகன்லாலுடன் மொட்ட ராஜேந்திரன் மோதும் அந்த ஒடியன் சண்டைக்காட்சி படத்தின் ஹைலைட்டாக அமைந்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த வருட துவக்கத்தில் மலையாளத்தில் மம்முட்டியுடன் 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' என்கிற படத்திலும் மொட்ட ராஜேந்திரன் மிக முக்கியமான வில்லன் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.