Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் -2' தள்ளிப் போவது ஏன்?

18 டிச, 2018 - 19:08 IST
எழுத்தின் அளவு:
Why-Indian-2-Shooting-delay.?

கடந்த 1996ல், நடிகர் கமல் நடிக்க வெளியான படம் 'இந்தியன்'. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பரபரப்பாக பேசப்பட்டது. வசூலையும் குவித்தது. இதைத் தொடர்ந்து, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்க வேண்டும் என்று, பலரும் இயக்குநர் ஷங்கரிடம் வலியுறுத்தினர். காலம் வரும்போது, படம் எடுக்கலாம் என கூறி வந்தார் ஷங்கர்.

தற்போது அதற்கான காலம் வந்திருப்பதாக உணர்ந்து, அதே கமலை வைத்து, 'இந்தியன் -2'வை இயக்குகிறார் ஷங்கர். இந்தப் படத்துக்கான பூஜை போடப்பட்டு பிரம்மாண்ட செட்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு, படபிடிப்பு துவங்க இருந்த நிலையில், செட் அமைக்கும் பணியில் கால தாமதமாகும் என்பதால், பட ஷூட்டிங்கை, ஜனவரிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

அதோடு, அரசியலில் தீவிரமாக இருக்கும் நடிகர் கமல், படத்துக்கு ஏற்றபடி தன்னுடைய உடல் அமைப்புகளை மாற்ற வேண்டும்; அதற்கு சில காலம் வேண்டும் என்று படத் தயாரிப்புக் குழுவிடம் கேட்டுக் கொள்ள, அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டனர். அதே போல, பட நாயகியான காஜல் அகர்வால், படத்துக்காக களரி வர்மக்கலையைக் கற்று வருகிறார்.

இப்படி பல்வேறு காரணங்களால், படபிடிப்புத் தள்ளிப் போயிருக்கிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் படபிடிப்பைத் துவங்கி, அந்தாண்டு முடிவதற்குள் படபிடிப்புகள் முடிந்து, 2020ம் ஆண்டு பொங்கல் நாளில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in