ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. அடுத்தபடியாக, என்ஜிகே படத்தை தயாரித்து வரும் எஸ்.ஆர்.பிரபு தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது டியர் காம்ரேட் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. இதன் படப்பிடிப்பு ஆந்திராவிலுள்ள காக்கிநாடாவில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் அவர் ஓடிச்சென்று ஏறுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது அவர் கால் தவறி தடுமாறியிருக்கிறார். அருகில் நின்றவர்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று அவரை கீழே விழாமல் தடுத்திருக்கிறார்கள். இதனால் பெரிய விபத்தில் இருந்து தப்பியிருக்கிறார் விஜயதேவரகொண்டா.