ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சர்கார் படத்தில் கோமள வள்ளி என்ற பெயரில் வில்லி கேரக்டரில் ஜெயலலிதா போல நடித்தவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தற்போது, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருப்பதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.
இப்படி தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலட்சுமியிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதாவது, நீங்கள் ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும்; ஒருவரை கொலை செய்ய வேண்டும்; ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அப்படியென்றால், யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டார்.
அதற்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்த வரலட்சுமி, முத்தம் கொடுப்பதாக இருந்தால் நடிகர் சிம்புவுக்கு; கொலை செய்வதாக இருந்தால், நடிகர் விஷால், திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுப்பேன் என கூறினார். இது, சிரிப்புக்காக சொல்லப்பட்டதுதான் என்றாலும், சிலருடைய மனதை இது வருத்தப்பட வைத்ததாகக் கூறப்படுகிறது.