பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
எண்பதுகள் தொடங்கி சில வருடங்களுக்கு முன்புவரை பலவேறு வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்தானபாரதி. அதன் பிறகு குணச்சித்திர நடிகராகி ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் சஞ்சய் பாரதி. புத்தகம் உட்பட ஒரு சில படங்களில் நடித்த இவர், நடிகராக க்ளிக்காகவில்லை.
அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தற்போது சஞ்சய் பாரதி இயக்குனராக அறிமுகமாகிறார்.
மம்முட்டி நடித்த 'பழசிராஜா', திலீப், சித்தார்த் நடித்த 'கம்மார சம்பவம்' சமீபத்தில் வெளியான நிவின் பாலியின் 'காயம்குளம் கொச்சுண்ணி', கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான 'தூங்காவனம்' உட்பட பல படங்களை தயாரித்த பட நிறுவனம் 'ஸ்ரீகோகுலம் மூவீஸ்'.
இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தைத் தான் சஞ்சய் பாரதி இயக்குகிறார். காதல் ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்தப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இதை படநிறுவனத்தினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.