'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மிகப்பெரிய வெற்றிபெற்ற 'தர்மதுரை' படத்தை தொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி-விஜய்சேதுபதி கூட்டணியில் அடுத்ததாக உருவாகும் படம் 'மாமனிதன். இது இவர்கள் இருவரும் இணையும் நான்காவது படம்.. இந்தப்படத்தின் படப்பிடிப்பு வழக்கம்போல எளிய பூஜையுடன் சீனுராமசாமியின் சென்டிமென்ட் ஏரியாக்களில் ஒன்றான ஆண்டிபட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
கதாநாயகியாக விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகியான காயத்ரி நடிக்க, மிக முக்கியமான விதத்தில் 'ஜோக்கர்' குரு சோமசுந்தரம் நடிக்கிறார். படத்தில் ஆட்டோ டிரைவர் வேடத்தில் விஜய்சேதுபதி இந்துவாகவும் அவரது நண்பராக குரு சோமசுந்தரம் முஸ்லீமாகவும் நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில், யுவனுடன் இளையராஜவும் இணைந்து இசையமைக்க இருக்கிறார்.