வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பெங்களூரில் வசிக்கும் தமிழ் பொண்ணு காயத்ரி. ஏன் இப்படி மயக்கினாய் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப் படம் வெளிவரவில்லை. அதன் பிறகு 18 வயசு என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் அவருக்கு அறிமுகத்தை கொடுத்தது.
இந்த படத்தில் நடித்தபோதே விஜய் சேதுபதி நண்பர் ஆனார். அதன் பிறகு அவருடன் ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி படங்களில் நடித்தார்.
"காயத்ரி மிக நல்ல நடிகை அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை" என்று விஜய்சேதுபதி அடிக்கடி கூறுவார். அவரது சிபாரிசின் பேரில் தான் அவருடைய படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது காயத்ரி, விஜய் சேதுபதியுடன் 7வது முறையாக இணைகிறார். சீனு ராமசாமி இயக்குனம் மாமனிதன் படத்தில் நடிக்கிறார் காயத்ரி. விஜய் சேதுபதி, சீனு ராமசாமியுடன் இணையும் 4வது படம் இது. இதற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கிறார்கள்.