வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை அடுத்து பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சீதக்காதி. டிசம்பர் 20-ந்தேதி வெளியாகும் இந்த படத்தில் 75 வயது முதியவராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இது அவரது 25வது படமாகும். மேலும், டிசம்பர் 20-ந்தேதி சீதக்காதி திரைக்கு வரும் நிலையில், 21-ந்தேதி மாரி-2, அடங்கமறு, கனா உள்பட பல படங்கள் வெளியாகின்றன.
இது பற்றி விஜய் சேதுபதி கூறுகையில், எனது சீதக்காதி படம் வெற்றி பெற வேண்டும். அதேப்போல் தனுஷ், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்களும் வெற்றிபெற வேண்டும். யாரும் தோற்றுப்போக வேண்டும் என்று படங்கள் தயாரிப்பதில்லை. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு தான் படமெடுக்கிறார்கள். அனைவருமே வெற்றி பெற வேண்டும். அதற்காக நான் வாழ்த்துகிறேன் என்கிறார் விஜய் சேதுபதி.