ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரவிந்தசாமிக்கு தனி ஒருவன் போல, இறுதிச்சுற்று படத்தின் மூலம் மாதவனின் இரண்டாவது இன்னிங்ஸும் வெற்றிகரமாகத் தான் துவங்கியது. ஆனாலும் அரவிந்தசாமியை போல மளமளவென படங்களை ஒப்புக்கொள்ளாமல் செலக்டிவாக நடித்து வருகிறார் மாதவன். சமீபத்தில் தெலுங்கில் வெளியான நாகசைதன்யாவின் 'சவ்யசாச்சி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் மாதவன்.
தற்போது இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறாக உருவாகும் 'ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். இந்தப்படத்தில் நம்பி நாராயணன் கெட்டப்பில் மாதவனின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாக தொண்ணூறுகளில் குற்றம் சாட்டப்பட்டு, தனது வேலையை இழந்ததுடன் சிறைவாசத்தையும் சந்தித்தவர் தான் நம்பி நாராயணன். பின்னர் அந்த வழக்கில் நிரபாரதி என நிரூபிக்கப்பட்டார். ஆனந்த் மகாதேவன் இயக்கவுள்ள இந்தப்படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மும்மொழிகளில் தயாராகிறது. இதன் டீசர் நாளை வெளியாகிறது