'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
படம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பிவந்த மோகன்லாலின் 'ஒடியன்' படம் இன்று மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் பலவிதமான தோற்றங்களில் மோகன்லால் நடித்துள்ளார். அதில் குறிப்பாக மிகவும் இளமையான தோற்றமும், ரொம்பவே வயதான தோற்றமும் மோகன்லாலை இதுவரை ரசிகர்கள் பார்த்திராத புதிய நபராக காட்டுகின்றன.
மேலும் ஓடிவியா என்னும் பிளாக் மேஜிக் கலையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக்கப்படுள்ளது. மாந்த்ரீகர் என்று சொல்லக்கூடிய, நினைத்த நேரத்தில் எதிரியின் கண்களுக்கு மிருக உருவமாக தெரிய கூடிய ஒடியன் மாணிக்யன் என்கிற கேரக்டரில் தான் மோகன்லால் நடித்துள்ளார்.
இந்த காட்சிகளை படமாக்கும்போது நிறைய இடங்களில் மோகன்லால் நாலு காலில் நடக்க வேண்டி இருந்ததாம்.. எந்த மறுப்பும் சொல்லாமல் கைகளை தரையில் ஊன்றியபடி, மிருகங்கள் போல மோகன்லால் நடக்க, படக்குழுவினரே அவரது இந்த செயலை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனார்களாம்.