ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலகம் முழுவதும் வெளியாகும் படங்களைப் பற்றி தகவல்கள் அடங்கிய ஒரு இணையதளம் ஐம்டிபி. இந்த இணையதளத்தில் இந்தியத் திரைப்படங்களைப் பற்றிய தகவல்களும் கணிசமான அளவில் இடம் பெற்றுள்ளன. 2018ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் அந்த இணையதளம் டாப் 10 இந்தியப் படங்கள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்த் திரைப்படமான 'ராட்சசன்' 9.0/10 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், மற்றொரு தமிழ்ப் படமான '96' படம் 9.1/10 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. 9.0/10 புள்ளிகள் பெற்று ஹிந்திப் படமான 'அந்தாதுன்' முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஐம்டிபியின் டாப் 10 இந்தியப் படங்கள் பட்டியல்
1. அந்தாதுன் (ஹிந்தி)
2. ராட்சசன் (தமிழ்)
3. 96 (தமிழ்)
4. மகாநதி (தெலுங்கு)
5. பதாய் ஹோ (ஹிந்தி)
6. பேட்மேன் (ஹிந்தி)
7. ரங்கஸ்தலம் (தெலுங்கு)
8. ஸ்த்ரீ (ஹிந்தி)
9. ராஸி (ஹிந்தி)
10. சஞ்சு (ஹிந்தி)