தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோ என்ற திகில் கலந்த நகைச்சுவை படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் புவன் நல்லான், மீண்டும் அதே பாணியில் ஒரு படத்தை இயக்குகிறார். உலகப்புகழ் பெற்ற ஜாம்பி கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்கும் இப்படத்திற்கு ஜாம்பி என்றே பெயரிடப்பட்டுள்ளது.
எஸ்3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். யோகிபாபுவும், யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோபி சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர், சித்ரா ஆகியோருடன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் பிரபலமானவர்கள். பிரேம்ஜி இசையமைக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பட பூஜையுடன் இன்று(டிச., 13) ஆரம்பமானது. இயக்குநர் பொன்ராம் க்ளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.