பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தொடர்ந்து, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், ராஜா ரங்குஸ்கி, மன்னர் வகையறா, வண்டி உள்பட 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
சாந்தினி, நடன இயக்குனர் நந்தாவை காதலித்து வந்தார். இருவீட்டாரது சம்மதத்துடன் இவர்களது திருமணம், திருப்பதியில் இன்று(டிச.,12) நடந்தது. நெருங்கிய உறவிர்களும், நண்பர்களும் மட்டும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.
வருகிற 16ந் தேதி சென்னை மேயர் ராமநாதன் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்து கொள்கிறார்கள்.