இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமல்லாது தற்போது தென்னிந்திய திரையுலகத்திற்கும் மிகப்பெரிய சவாலாக மாறிவிட்டது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். சமீபத்தில் வெளியான ரஜினியின் '2.0' வை நாங்கள் வெளியிடுவோம் என சவால்விட்டு, அதேபோல இணையத்தில் வெளியிட்டும் அதிர்ச்சி அளித்தது தமிழ் ராக்கர்ஸ்.
தமிழ் ராக்கர்ஸை சமாளிக்க தமிழ் திரையுலகம் திணறிவரும் இந்த சூழலில், மலையாளத்தில் மோகன்லால் நடித்து, வரும் டிச-14ல் வெளியாகவுள்ள 'ஒடியன்' படத்தையும் இணையதளத்தில் வெளியிட போவதாக சவால் விட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.
அதேசமயம் இந்தப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றினால் அதனை உடனுக்குடன் அழித்துவிடும் தொழில்நுட்பத்துடன் ஒரு தொழில்நுட்ப குழுவையே களமிறக்கியுள்ளாராம் படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன். இந்த முயற்சி பலனளித்தால் அது இனி தமிழ் சினிமாவுக்கும் மிகப்பெரிய ஆசுவாசத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.