ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளை (13ந் தேதி) தொடங்கி வருகிற 20ந்தேதி வரை நடைபெறுகிறது. தமிழக அரசின் ஆதரவுடன் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில், 59 நாடுகளில் இருந்து, 159 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுகின்றன.
இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கத்தில் நாளை மாலை 6.15 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு பிரதிநிதிகளாக ரசூல் பூக்குட்டி (சவுண்ட் டிசைனர்), இயக்குநர் ஷில்பா (சிங்கப்பூர்), இயக்குநர் அபு ஷேஹெட் எமோன் (வங்காள தேசம்), இயக்குநர் நைனா சென் (ஆஸ்திரேலியா) ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவுக்காக தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளது. தமிழக அரசின் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சர்வதேச திரைப்பட விழா குழுவினரிடம் இதனை வழங்கினார். அப்போது செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆகியோர் உடன் இருந்தனர். தமிழக அரசு இதுவரை சென்னை சர்வதேச திரைப்படவிழாவுக்கு 3 கோடியே 25 லட்சம் நிதி வழங்கியிருப்பதாக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.