ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'பேட்ட' படத்தின் இசை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்றது. பொதுவாக இசை விழாக்களில் ஆடியோ சிடி போன்ற வடிவத்துடன் ஒரு பெரிய பேனரை செய்து அதைத்தான் வெளியிடுவார்கள்.
ஆனால், 'பேட்ட' பட இசை வெளியீட்டு விழாவில் 'பேட்ட பொங்கலுக்கு பராக்' என்ற வாசகத்துடன் பெரிய பேனருடன் இசை வெளியீட்டை நடத்தினார்கள். ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்திற்கு படம் எப்போது வெளியாகிறது என்பதைக் குறிப்பிடும் டேக்லைன் அவசியம் தானா என்ற கேள்வி எழுந்தது.
பொங்கலுக்கு வெளிவர உள்ள 'பேட்ட' படத்திற்கு முன்பாகவே அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' படம் வெளிவரும் என்று அறிவித்தார்கள். 'விஸ்வாசம்' படம் வெளிவருவதை 'பேட்ட' தரப்பில் எப்படியெல்லாமோ தடுத்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளிவருவோம் என்று சொல்லிவிட்டார்களாம். இடையில் 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளிவராது என்ற ஒரு தகவலும் பரவியதால்தான் இசை வெளியீட்டு விழாவில் 'பேட்ட பொங்கலுக்கு பராக்' என்ற வாசகம் இடம் பெற்றதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.