‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பதை இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்கள், யு-டியுபில் அவர்களது வீடியோக்களுக்கு உள்ள வரவேற்புகள் ஆகியவற்றை வைத்தே கணிக்கப்படுகிறது. இவற்றையும் தாண்டி படம் நன்றாக இருந்தால் மட்டுமே அவர்களது படங்கள் வசூலில் சாதனை படைக்க முடியும்.
இருந்தாலும் யு டியூப் சாதனையை ஹீரோக்களின் ரசிகர்கள் பெரிய சாதனையாகவே கொண்டாடி வருகிறார்கள். அந்த விதத்தில் யு டியூபில் இதுவரையில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா செய்த சாதனைகளுடன் 'மாரி 2' படத்தின் டிரைலர் மூலம் அவர்களது வரிசையில் தனுஷும் இணைந்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள 'மாரி 2' படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது. அந்த டிரைலர் தற்போது 1 கோடியே 60 லட்சம் பார்வைகளை நெருங்க உள்ளது. 5 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளது. யு டியூபில் இதுவரையில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்களின் வீடியோக்கள் மட்டுமே 5 லட்சம் லைக்குகுளைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அடுத்து தற்போது தனுஷின் 'மாரி 2' டிரைலர் 5 லட்சம் லைக்குகளைக் கடந்து அவருடைய முந்தைய பட டிரைலர்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.