ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வௌியீட்டு விழா, கோலாகலமாக நடந்தது. இப்படத்தில் நடித்த இயக்குநரும், நடிகருமான சசிகுமார் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசியது:
ரஜினியின் படத்தை முதல்நாள் முதல் ஷோ பார்த்த அவரின் ரசிகன். அவரை அண்ணாந்து பார்த்தவன், அவ்வளவு உயரத்தில் இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தோழமையாக பழகினார் ரஜினி. மிக எளிமையாக அனைவரிடமும் பழகியதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்தது.
எனக்கு டான்ஸ் வராதுன்னு ரஜினி சார் சொன்னார். ஆனா அது உண்மையில்ல. அவ்ளோ ஸ்டைலா ஆடினார் அவரின் பழைய கதைகளையெல்லாம் சொல்லியபோது பிரமிப்பாக இருந்தது. அவர் சும்மா இந்த உயரத்திற்கு வரவில்லை, அவ்வளவு உழைப்பு. ஈடுபாடு. அது இருந்ததால் தான் அவர் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.
பேட்ட அருமையான படமாக வந்திருக்கிறது. ஒரு ரசிகர் ரசித்து ரசித்து படம் எடுத்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான், கார்த்திக் சுப்பராஜ் எடுத்திருக்கிறார். ரஜினி அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், நீங்கள் இன்னும் நிறைய படங்கள் நடித்து கொண்டே இருக்கணும். அமிதாப் மாதிரி தொடர்ந்து படங்கள் பண்ணுங்கள்.
இவ்வாறு சசி குமார் பேசினார்.