வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
2.0 படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட. பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. சர்கார் இசைவெளியீடு நடைபெற்ற அதே தனியார் கல்லூரியில்தான் பேட்ட இசைவெளியீடும் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக மரணமாஸ் என்ற பாடல் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. டிசம்பர் 7 அன்று மற்றொரு சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டது.
2019-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் பேட்ட படத்தின் தமிழக தியேட்டரிகள் ரைட்ஸை கலைப்புலி தாணு, கல்பாத்தி அகோரம் ஆகியோர் வாங்க போட்டிபோட்டனர். லேட்டஸ்ட் தகவல்... பேட்ட படத்தின் தமிழக உரிமையை உதயநிதி வாங்கியிருக்கிறாராம்.