'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
யு டியுபில் தற்போது நடந்து வரும் போட்டியைப் பார்த்தால் மாமனார் ரஜினிகாந்த்துக்கும், மருமகன் தனுஷுக்கும் நடக்கிறதா அல்லது முன்னாள் நண்பர்களான அனிருத்திற்கும், தனுஷுக்கும் நடக்கிறதா என்று சந்தேகம் இருக்கிறது.
'மாரி 2' படத்தின் முதல் சிங்கிளான 'ரௌடி பேபி' பாடலை பத்து நாட்களுக்கு முன்பு தனுஷ் வெளியிட்டார். அதற்கடுத்த சில நாட்களில் 'பேட்ட' படத்தின் சிங்கிள் பாடலான 'மரண மாஸ்' பாடல் வெளியானது. 'பேட்ட' பாடலை விட 'மாரி 2' பாடல் 30 லட்சம் பார்வைகளுடன் முன்னணியில் உள்ளது.
அடுத்து நேற்று 'பேட்ட' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'உல்லலலா' பாடலை வெளியிட்டார்கள். இன்று 'மாரி 2' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'மாரி கெத்து' பாடலை வெளியிட்டுள்ளார்கள்.
யு டியூபில் இந்த இரண்டு படங்களின் பாடல்கள்தான் டிரென்டிங்கில் அடுத்தடுத்து போட்டி போட்டு வருகின்றன. ரஜினிக்குப் போட்டியாக தன் படப் பாடலை தனுஷ் வெளியிடுவது போலத் தெரியவில்லை. 'பேட்ட' படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத்திற்குப் போட்டியாகவே 'மாரி 2' பாடல்களை வெளியிடுவது போலத் தெரிகிறது.
அனிருத்தை விட்டுப் பிரிந்த பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களின் பாடல்கள் பெரிய சாதனையைப் படைக்கவில்லை. 'மாரி' படத்தில் அனிருத்தின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். இப்போது மீண்டும் யுவனுடன் தனுஷ் ஜோடி சேர்ந்துள்ள 'மாரி 2' பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. யு டியுபில் அனிருத் ரசிகர்களுக்கும், யுவன் ரசிகர்களுக்கும் நடக்கும் சண்டைகளே இதற்கு சாட்சி.