தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் முதன்முறையாக தயாரித்து, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி, இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.
கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்க கிராமத்து பெண்ணின் போராட்டத்துடன், அப்பா - மகள் பாசத்தையும் உணரும் வகையிலாக இப்படம் தயாராகி உள்ளது. ஏற்கனவே டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் டிச., 21ம் தேதி ரிலீஸாகிறது.
இதுப்பற்றி இப்படத்தின் இணை தயாரிப்பாளரான கலை அரசு கூறுகையில், "கனா, சந்தோஷம் மற்றும் பயம் என ஒரே நேரத்தில் கலவையான உணர்வுகளை தந்திருக்கிறது. இப்படம் விளையாட்டை அடிப்படையாக கொண்ட திரைப்படம் மட்டும் அல்ல, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் உணர்ச்சிகளை கொண்ட படம். குறிப்பாக தந்தை, மகள் உறவு, கடின உழைப்பு ஆகியவை அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் விஷயம். இந்தப்படம் ரசிகர்களிடத்தில் நிச்சயம் வரவேற்பை பெறும்" என்றார்.