சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
மலையாள படங்களை பொறுத்தவரை ஒரு படம் அங்கே சூப்பர் ஹிட்டானால் மட்டுமே அதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது வழக்கம். இதற்கு உதாரணமாக மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை சொல்லலாம். ஆனால் தற்போது மோகன்லால் நடித்துள்ள ஒடியன் படம் இந்த விஷயத்தில் புதிய ஒரு சாதனையை செய்துள்ளது.
ஆம். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் தயாராகியுள்ள ஒடியன் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. மலையாள சினிமாவை பொறுத்தவரை இது புது சாதனை தான். வரும் டிச-14ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தை தமிழில் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தெலுங்கில் வெளியிடும் உரிமையை டகுபதி கிரியேஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.