பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்து வெளியான படம் 96. காதலை மையமாகக் கொண்ட இந்த படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியிருந்தார். தமிழில் வெற்றி பெற்ற இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் விரைவில் தொடங்குகிறது.
விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க ராணா, நானி, சர்வானந்த் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்த நிலையில், தற்போது கோபிசந்த் அப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஹீரோயினாக நடிக்க பல நடிகைகள் முன்வந்தபோதும், தமிழில் நடித்த த்ரிஷாவையே நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.