இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரசிகர்களை மகிழ்விக்க நடிகர்கள், நடிப்பிலும் சரி, உடலமைப்பிலும் சரி, தங்களை வித்தியாசமாக காட்ட முயற்சித்து வருகிறார்கள். அதிலும் சிக்ஸ் பேக் வைப்பது நடிகர்களின் ரசிகர்களை துள்ளி குதிக்க வைக்கும். உடலை எப்போதும் ஸ்லிம்மாக வைத்து கொள்ளும் தனுஷ், பொல்லாதவன் படத்திற்காக முதன்முதலில் சிக்ஸ் பேக் வைத்தார். அதனைத்தொடர்ந்து வேலையில்லா பட்டதாரியில் அதை தொடர்ந்தார்.
இப்போது, மாரி 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மாஸான சண்டைக்காட்சி உள்ளதாம். அதற்காக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியானபோது, அதில் தனுஷின் சிக்ஸ் பேக் காட்சி இடம் பெற்றிருந்தது.
தனுஷ் உடன் சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, டொவினோ தாமஸ், ரோபோ சங்கர், கல்லூரி வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாரி 2, வருகிற டிச.,21ம் தேதி ரிலீஸாகிறது. பாலாஜி மோகனே இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.