தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்த படத்தில் அரசின் நலத்திட்டங்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சொல்லி அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுகவினர் தியேட்டர்கள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த சர்கார் படத்தின் கட்அவுட், பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது விஜய் ரசிகர்கள் என்று சொல்லப்பட்ட இரண்டு பேர், கத்தி, அரிவாளுடன் தோன்றி சர்காருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராக பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது.
அதையடுத்து அந்த நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.