Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2018 டுவிட்டர் ஹேஷ்டேக்கில் 'சர்கார்' முதலிடம்

07 டிச, 2018 - 11:51 IST
எழுத்தின் அளவு:
Twitter-India-Trends-Sarkar-in-No-1-Place

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் சினிமா பிரபலங்கள் டுவிட்டரைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டிரென்டிங்கிலும் டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் தான் பிரபலமானவை. அந்த விதத்தில் பேஸ்புக்கை பின்னுக்குத் தள்ளி டுவிட்டர் தான் அதிகமாக பேசப்படுகிறது.

2018ம் ஆண்டுக்கான டுவிட்டர் ஹேஷ்டேக்குகளில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவற்றின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் நடித்து வெளிவந்த 'சர்கார்' படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அஜித் நடித்து பொங்கலுக்கு வெளிவர உள்ள 'விஸ்வாசம்' ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் பரத் அனி நேனு, 4வது இடத்தில் அரவிந்த சமேதா, 5வது இடத்தில் ரங்கஸ்தலம், 6வது இடத்தில் காலா, 7வது இடத்தில் பிக் பாஸ் தெலுங்கு 2, 8வது இடத்தில் மீடூ, 9வது இடத்தில் விசில் போடு, 10வது இடத்தில் ஐபிஎல் 2018 ஆகியவை இடம் பெற்றுள்ளன.

டாப் 10 இடங்களில் “சர்கார், விஸ்வாசம், காலா, விசில் போடு” ஆகியவை தமிழ்நாடு சம்பந்தப்பட்டவை. தென்னிந்திய அளவில் டுவிட்டரைப் பொறுத்தவரையில் 'சர்கார்' மூலமாக விஜய்யும், 'விஸ்வாசம்' மூலமாக அஜித்தும் தான் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் அனைவரும் இவர்களுக்குப் பிறகுதான் இருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கவிதாயினி கீர்த்தி சுரேஷ்கவிதாயினி கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து ஒரு கோடி, மகிழ்ச்சியில் 'மாரி' தனுஷ் அடுத்தடுத்து ஒரு கோடி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

விக்கு மண்டையன் விசை என்றாலே வெட்டி விளம்பரம் தானே..
Rate this:
07 டிச, 2018 - 15:30 Report Abuse
Vilamparam... Sarkar First look., Motion poster..First track...Audio release....Teaser..Trailer. ..Movie Release. ...Evalo . ...But Visvasam yendra Oru vaarthai...2place la eruku....
Rate this:
kk -  ( Posted via: Dinamalar Android App )
07 டிச, 2018 - 12:45 Report Abuse
kk always Thalapathi no. one and Thala follows him
Rate this:
JMK - Madurai,இந்தியா
07 டிச, 2018 - 12:38 Report Abuse
JMK அப்போ விஜய்க்கு பின்னாடிதான் அஜிதா ?
Rate this:
JMK - Madurai,இந்தியா
07 டிச, 2018 - 12:36 Report Abuse
JMK ட்விட்டர்ல மட்டும் தான் விஜய் முதலிடம் வசூலில் இருநூறு கோடி கூட தாண்ட முடியலையே ? அந்தோ பரிதாபம் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in