Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2.0 - 3டியில் வெற்றி, 2டியில் மந்தம்

07 டிச, 2018 - 08:20 IST
எழுத்தின் அளவு:
2.0---box-office-in-3D,-dull-in-2D

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம், உலகம் முழுக்க 500 கோடி வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான 6 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழைவிட தெலுங்கு ஹிந்தியில் 2.0 படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படும் அதே நேரம், அங்கும் சுமாரான வரவேற்பே பெற்றுள்ளது என்ற தகவலும் அடிபடுகிறது. இதற்கிடையில் சென்னையில் பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டுள்ளதால் 2.0 படம் நல்ல வசூல் செய்து வருகிறது.

2.0 படம் வெளியான நவம்பர் 29-ம் தேதி முதல் 6 நாட்களில் சென்னையில் மட்டும் 13 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளது. இதன் அடிப்படையில் 2.0 படம் பாகுபலி 2 படத்தின் சென்னை வசூலை முறியடிக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

சென்னையில் 2.0 வசூல் சாதனை புரிந்தாலும், தமிழகத்தில் உள்ள பி மற்றும் சி சென்டர்களில் 2டியில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் மக்களிடம் வரவேற்பில்லை. 2.0 படத்தை 3டியில் காணவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், 2டியில் திரையிட்ட பல தியேட்டர்களில் வசூல் மந்தமாக இருப்பதாக சொல்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்கு கிடைத்த கவுரவம்விஜய்க்கு கிடைத்த கவுரவம் துல்கர் சல்மான் கொடுத்த கால்ஷீட் துல்கர் சல்மான் கொடுத்த கால்ஷீட்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
07 டிச, 2018 - 18:35 Report Abuse
Vasudevan Srinivasan ஒரே நேரத்தில் ஏராளமான அரங்குகளில் திரையிடப் பட்டதால் படம் குறிப்பிட்ட வசூலை பெற்றிருக்கலாம் ஆனால் படம் முதல் பாகம் போல் இல்லை சுமார்தான்.. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தை சில காட்சிகளில் ரசிக்கலாம் ஆனால் படம் முழுவதும் வெறும் கிராபிக்ஸ் என்றால் திகட்டுவதை தவிர்க்கமுடியவில்லை.. இது ரஜினி சார் படமல்ல இது ஷங்கர் சார் படமுமல்ல.. வி எப் எக்ஸ் கிராபிக்ஸ் வல்லுனர்களின் படம்.. இருந்தாலும் ஒரு முறை பார்க்கலாம்..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
07 டிச, 2018 - 16:42 Report Abuse
Mirthika Sathiamoorthi படம் வெற்றியா தோல்வியா? நம்ம பயலுங்களுக்கு விஜயகாந்த் சார் மாதிரி புள்ளிவிவரம் சொன்னாதான் புரியம்....படம் ரிலீஸ் ஆனது 7000 திரையரங்குகள் இந்தியாமுழுவதும் 2000 திரையரங்குகள் இந்தியாவிற்கு வெளியே...இந்தியாவை மட்டும் எடுத்துக்குவோம்..(இது ஒரு அதிகாரபூர்வ புள்ளிவிவரம் அல்ல ஒரு காமன்சென்ஸ் a simple logic..) ஒரு கணக்கிற்காக 70000 திரையரங்குகள் 4 காட்சிகள் ( முதல் நாள்) 200 இருக்கைகள் ( சத்தியம் காம்ப்ளெக்ஸில் உள்ள ஸ்டுடியோ 5 ) = 56 லட்சம் பார்வையாளர்கள். டிக்கெட் கட்டணம் 100 ரூபாய் என்றாலே 56 கோடி வசூல்... 200 இருக்கைகள் மற்றும் 100 ரூபாய் கட்டணம் இவை குறைவான மதிப்பீடுயென்றால் வசூல் இன்னும் அதிகம் ( இந்திய முழுவதும் )..வெளிநாட்டு திரைஅரங்குகின் வசூலையும் சேர்த்தால் முதல் நாள் வசூல் 100 கோடி... ஆராவதுநாள் முடிவில் 500 கோடி சாத்தியமே...இடையில் இருநாள் வார விடுமுறை வேறு ...( conformed in wikipedia...you can check there)....உலகம் முழுவதும் வெளியான படம்..வெறும் தமிழ்நாட்டின் வசூலை மட்டும் கணக்கு போடுவது, எங்கவூர் தியேட்டரில் கூட்டமில்லை அதனால் பிளாப் அப்ப்டீங்கறமாதிரி இருக்கு...100 கோடிக்குஅதிகமாக செலவுசெய்து எடுக்கும் எந்த தமிழ் படமும் தமிழ்நாட்டில் பிளாப். அதுதான் எதார்த்தம்.. பின் ஏன் 500 கோடி ? காரணம் ரஜினி....அவர் படம் மட்டும் 10000 திரை அரங்குகளில் வரும். இதை தமிழ் மீடியாக்கள் புரிந்துகொள்ளவேண்டும் ...இது தமிழ்ப்படம்..சரி அப்போ தமிழ்நாட்டில் யாருக்கு நஷ்டம்? ரஜினிக்கு? ஷங்கருக்கு? திரையரங்கு உரிமையாளர்களுக்கு ( படத்தை தயாரிப்பு நிறுவனம் நேரடியாக வெளியிட்டது ) ? லைக்கா? அது சீன ஜப்பானில் வெளியிட திட்டமிட்டுள்ளது அப்புறம் எங்கே நஷ்டம்? எதிர்பார்த்த வசூல் இல்லை...எவ்வளவு எதிர்பார்த்தார்கள் தமிழ்நாட்டில்? தமிழ்நாட்டில் மட்டும் 500 கோடியா? தமிழ்நாட்டு வசூலை மட்டும் நம்பி 500 கோடி செலவு செய்ய லைக்கா என்ன பைத்தியமா? அது ஒரு கார்பரேட்... போட்ட காசை எப்படி எடுக்கணும்ன்னு தெரியும்...ஒரு கால்குலேஷன் இல்லாமலா 500 கோடி போடுவாங்க? நாமதான் இது புருடா, தமிழ்நாட்டில் வரவேற்பில்லைன்னு திரும்ப திரும்ப ஒரே பல்லவியை பாடிகிட்டு இருக்கோம்...
Rate this:
07 டிச, 2018 - 14:01 Report Abuse
sura Gopalan உண்மையிலே படத்தின் வசூல் 200கோடி யை தாண்ட வில்லையாம். எல்லாம் ஒரு புருடா.....
Rate this:
JMK - Madurai,இந்தியா
07 டிச, 2018 - 12:44 Report Abuse
JMK படத்தோட கண்டெண்ட் அப்படி ? இந்த படத்தை பார்த்தால்தான் அதோட முழு எபெக்ட் தெரியும் ?
Rate this:
rajinidasan - Bangalore,இந்தியா
07 டிச, 2018 - 12:15 Report Abuse
rajinidasan 2.0 வசூல் பற்றிய உண்மை என்ன?: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் சென்னை: 2.0 படத்தின் வசூல் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் அளித்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் வசூலை லைகா நிறுவனம் மிகைப்படுத்திக் கூறுவதாக பேச்சு கிளம்பியுள்ளது. இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பதாவது, பல கேள்விகள் 2.0 வின் வசூல் பற்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வெறும் செய்திக் கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. சுமார் பத்து மணிக்கு அதன் தோராயமான மொத்த வசூலை கணக்கிட்டுவிட்டார்கள். அதற்கான எல்லா சூத்திரங்களும் வேறு எந்தத் தொழிலையும்போல இதிலும் உண்டு. இந்திய வரலாற்றில் ஒரு சினிமா ஈட்டும் உச்சவசூல் 2.0 வுக்குத்தான். ஏனென்றால் 2.0 உலகமெங்கும் வெளியாகியது. முதல் ஐந்து நாட்களிலேயே நாநூறு கோடியை தாண்டி விட்டது வசூல் என லைக்கா அறிவித்துள்ளது [ எந்த நிறுவனமும் வசூலை மிகையாக அறிவிக்காது] மொத்தத்தில் இந்திய அளவில் வசூலில் அதன் இரண்டாமிடத்தில் இருக்கும் படத்தை விடஒரு மடங்குக்கு மேல் கூடுதல் வசூலாகலாம். முதலீட்டை விட இருமடங்கு வசூல். பதினொன்றரை மணிக்கே ஷாம்பேன் உடைத்துக் கொண்டாடிவிட்டார்கள். அதன் பின்னர் தான் இங்கே இணையத்தில் சம்பந்தமில்லாதவர்கள் வசூல் கணக்குகளை அலச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எவரிடமும் தகவல்கள் இல்லை. இது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம். உலகமெங்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆகவே தான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை. இந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பு உலகளாவிய இளையதலைமுறை ரசிகர்களுக்குரியது. அவர்களின் ரசனையை கணக்கில் கொண்டது. ஆகவேதான் பாடல்கள் இல்லை. வழக்கமான தமிழ்ப்படம் முதலில் நெடுநேரம் விளையாட்டாக அலையும், அதன்பின்னரே முதல்முடிச்சு விழும். இதில் இரண்டாவதுகாட்சியிலேயே முதல் முடிச்சு விழுந்துவிடுகிறது. அதன்பின் நகைச்சுவை, குடும்பக்காட்சி எதற்கும் இடமில்லை. உணர்ச்சிகரக் காட்சிகள் அளவோடு உள்ளன. வழக்கமான தமிழ்ப்பட அளவுகோல்களைக்கொண்டு இதை மதிப்பிட்டவர்கள் இதன் மலைக்கச் செய்யும் உலகளாவிய வசூலை எண்ணிப் பார்க்க வேண்டும். இனி இந்த வகைப் படங்கள் கூடுதலாக வரும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் இது முப்பரிமாணப் படம். அதில் ஓர் அளவுக்குமேல் காட்சிகளை வசனங்களாக நீட்ட முடியாது. ஏனென்றால் முப்பரிமாணம் கொண்டு நின்றிருக்கும் பொருட்கள் கவனச்சிதறலை உருவாக்கும்.
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in