Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதலில் மறுப்பு தெரிவிப்பது ஏன்?

06 டிச, 2018 - 07:23 IST
எழுத்தின் அளவு:
Why-denied-in-begining-stage.?

ஜெயலலிதா மரணமடைந்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டன. இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குனர் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

இவர்களில் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் இருவரும் இதற்கான பூர்வாங்க வேலைகளையே தொடங்கவில்லை. பிரியதர்ஷினி மட்டும் தான் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு 'THE IRON LADY' என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து நித்யா மேனன் தரப்பினரிடமிருந்து எந்த அதிகார்பூர்வ தகவலும் இல்லாமல் இருந்தது. இந்தப்படத்தில் நடிக்க இருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோதும் அப்படி ஒரு படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லி இருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாக உருவாகும் 'THE IRON LADY' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

THE IRON LADY' படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஜெயலலிதா தோற்றத்தில் நித்யா மேனன் படம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் சசிகலா வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருக்கிறார். இந்த செய்தியை என்ன காரணத்தினாலோ வரலட்சுமி மறுத்துவருகிறார். ஆனாலும் அவர் சசிகலா வேடத்தில் நடிப்பது உண்மைதான் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். முதலில் ஜெயலலிதாவாக நடிக்கவில்லை என்று நித்யா மேனன் மறுத்தார். இப்போது அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in